ஏரியில் மூழ்கி சென்னையை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த திருவிழாவிற்கு வந்த இடத்தில் ஏரியில் மூழ்கி சென்னையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்;

Update: 2022-03-11 05:15 GMT

ஏரியில் மூழ்கி சென்னையை சேர்ந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் மோகன் (35). இவர் செஞ்சி அருகே உள்ள செ.குன்னத்தூர் கிராமத்தில் நடைபெற்ற அங்காளம்மன் கோவில் திருவிழாவுக்கு தனது மனைவியுடன் வந்துள்ளார். இயற்கை உபாதையை கழிப்பதற்காக மோகன் அந்த கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்று கால் கழுவுவதற்காக தனது பேண்ட் மற்றும் மொபைல் ஆகியவற்றை கரையில் வைத்து விட்டு கால் கழுவ ஏரியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி ஏரிக்குள் விழுந்து விட்டார். கணவர் வெளியில் சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாததை கண்டு அவரது மனைவி பல இடங்களில் தேடினார். அப்போது ஏரியில் தனது கணவரின் பேண்ட் மற்றும் மொபைல் இருந்ததை கண்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஏரியில் மோகனின் உடலை தேடினர்.இந்த சம்பவம் குறித்து செஞ்சி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஏரியில் இருந்து மோகனின் உடலை மீட்டனர்.இதைக் கண்ட அவரது மனைவி மற்றும் அருகில் இருந்த உறவினர்கள் கதறி அழுதனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News