செஞ்சி அருகே கட்டையால் அடித்து முதியவர் கொலை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடிபோதையில் கட்டையால் அடித்து முதியவரை கொலை செய்த குடிகாரரை போலீசார் தேடி வருகின்றனர்.;
குடி போதையில் முதியவர் கொலை, போலீஸ் வலை வீச்சு.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, இவரது மகன் ஆறுமுகம் வயது 65 கூலித்தொழிலாளி, அதே ஊரை சேர்ந்த சுகுமார் என்பவர் குடிபோதையில் நள்ளிரவு ஆறுமுகம் வீட்டுக்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அதே ஊரைச் சுகுமாரை வழக்குப் பதிவு செய்து அனந்தபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.