கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக் கோரி செஞ்சி அருகே சாலை மறியல்
செஞ்சி அருகே நேற்று நடந்த வெடிவிபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலியாக காரணமான கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக் கோரி சாலைமறியல்;
கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக் கோரி செஞ்சி அருகே சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட ஊரணிதாங்கள் கிராமத்தில் நேற்று நடந்த வெடி விபத்தில் சிக்கி அங்கு வயலில் விவசாய வேலை செய்து கொண்டு இருந்த செல்வி என்பவர் உயிரிழந்தார்,
இதற்கு காரணமான குவாரி உரிமையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி அக்கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் செஞ்சி செல்லும் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர், அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.