செஞ்சி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் திடீர் ஆய்வு செய்தார்.;
விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கொரானா பரவலை தடுக்க அமைச்சர்கள் க.பொன்முடி, கே.எஸ்.மஸ்தான் ஆகியோர். நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் செஞ்சி அரசு மருத்துவமனையில்,கொரானா சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்தார்.