செஞ்சி தொகுதி அமமுக வேட்பாளர் மனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி அமமுக வேட்பாளர் கௌதம்சாகர் மனு தாக்கல் செய்தார்.;

Update: 2021-03-17 16:23 GMT

செஞ்சி சட்ட மன்ற தொகுதி அமமுக. வேட்பாளர் அ.கௌதம்சாகர், செஞ்சி மாதாகோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சிங்கவரம் சாலை, காந்தி பஜார் வழியாக செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தனர். 

பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுகுமாரிடம் அமமுக வேட்பாளர் அ.கௌதம்சாகர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது தேமுதிக. மாவட்ட பொருளாளர் இல.தாயாநிதி, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலர் எம்.பாரூக், தொகுதி தலைவர் ஏ.கே.குரைஷி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News