நந்தன் கால்வாய் புனரமைப்பு: அமைச்சர் துவக்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தின் நந்தன் கால்வாய் திட்டத்தை புனரமைப்பதற்காக ரூபாய் 26 கோடி மதிப்பில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Update: 2021-02-15 09:45 GMT

விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள நந்தன் கால்வாய் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து அடைக்கப்பட்டிருந்தது. இதனை தூர் வருவதற்காகவும் வாய்க்கால்களை சரி செய்வதற்கும் ரூபாய் 26 கோடி மதிப்பில் திட்டம் ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் இந்த திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பயன்பெறும். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 5500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். 36 ஏரிகள் நிறையும் 22 வாய்க்கால்கள் தூர்வாரப்படுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் இந்த திட்டத்திற்கு முழுமையாக 800 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது, முழு திட்ட அறிக்கை வந்தவுடன் தமிழக அரசு உடனடியாக இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News