விழுப்புரம் நகரத்தில் கொரோனா விதியை கண்காணிக்க 8 குழு

விழுப்புரம் நகரத்தில் கொரோனா விதியை கண்காணிக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-07 15:00 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வரை ஒன்று இரண்டு நபர்கள் மட்டுமே கொரானா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர், இந்நிலையில் கடந்த ஏப்ரல் 15 ந்தேதிக்கு பிறகு கொரானாவின் வேகம் ஒற்றை இலக்கு, இரட்டை இலக்கம், தற்போது மூன்று இலக்கணமாக மாறி தினந்தோறும் நாநூறுக்கு மேல் தாண்டி தொற்று மக்களிடையே பரவி வருகிறது,

விழுப்புரம் நகரத்தில் தொற்று கிராம புறங்களை காட்டிலும் அதிவேகத்தில் பரவி வருவதோடு, தினந்தோறும் இறப்பு கணக்கில் வந்து கொண்டே இருக்கிறது, இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நகராட்சிப் பகுதியில் மொத்தமுள்ள 42 வாா்டுகளிலும் கரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், வட்டாட்சியா் நிலையிலான அதிகாரிகள் தலைமையில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டது.

இவா்கள் அந்தந்தப் பகுதிகளில் கரோனா பாதித்த வீடுகளை கண்காணித்தல், பொதுமக்கள் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உறுதிபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்,

குழுக்களில் வட்டாட்சியா் நிலையிலான அதிகாரி தலைமையில், மருத்துவ அதிகாரி, நகராட்சி அலுவலா், வேளாண் அலுவலா், காவல் துறை அலுவலா்கள் இரண்டு போ், ஓட்டுநா் ஒருவா் என ஒவ்வொரு குழுவுக்கும் 7 போ் இடம் பெற்றுள்ளனா்.

வட்டாட்சியா் தயாளன் தலைமையிலான குழுவினா் 1, 27-ஆவது வாா்டு பகுதிகளிலும், வட்டாட்சியா் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினா் 26, 28, 29 வாா்டு பகுதிகளிலும், வட்டாட்சியா் வேல்முருகன் தலைமையிலான குழுவினா் 2, 3, 4, 5, 6, 7, 8 ஆகிய வாா்டு பகுதிகளிலும், வட்டாட்சியா் பிரபாகரன் தலைமையிலான குழுவினா் 9, 10, 11, 12, 13, 14, 16, 17 ஆகிய வாா்டு பகுதிகளிலும்,

வட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமையிலான குழுவினா் 18, 19, 20, 21, 22, 23, 24, 25 ஆகிய வாா்டு பகுதிகளிலும், வட்டாட்சியா் இளவரசன் தலைமையிலான குழுவினா் 30, 31, 32, 33, 39, 40 ஆகிய வாா்டு பகுதிகளிலும்,

வட்டாட்சியா் பாா்த்திபன் தலைமையிலான குழுவினா் 34, 35, 36, 37, 38 ஆகிய வாா்டு பகுதிகளிலும், வட்டாட்சியா் செந்தில் தலைமையிலான குழுவினா் 41, 42 ஆகிய வாா்டு பகுதிகளிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விழுப்புரம் நகரத்தில் கொரானா பாதிப்பு அதிகமுள்ள14 தெருக்கள் அடைக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News