மாஸ்க் போடாத 650 பேரிடம் ரூ.200 அபராதம் வசூல்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா நோய் பரவலை தொடர்ந்து மாஸ்க் அணியாமல் வந்தால் ரூ.200 அபராதம் வசூல் ஆரம்பம்;
கரோனா பரவல் அதிகரித்து வருவதால், விழுப்புரம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.200 அபராதம் வசூலிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இந்த நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா். முகக் கவசம் அணியாதவா்களுக்கு சுகாதாரத் துறை, காவல் துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
மேலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கு ரூ.500, பொது இடங்களில் எச்சில் உமிழ்வோருக்கு ரூ.500, சலூன், அழகு நிலையங்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் கரோனா விதிமீறல் இருந்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என்று சுகாதாரத் துறையியினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிகிழமை வரை மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் வந்த 650 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதுபோல் சமூக இடைவெளியை பின்பற்றாத கடை உரிமையாளர்கள் 5 பேரிடம் இருந்து தலா ரூ.500 வீதம் ரூ.2,500 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கடந்த 3 நாட்களில் மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 1,216 பேரிடம் அபராத தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றும் வரை இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றனர்.