நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவிண்டாலுக்கு 100 ரூபாய் வரை கட்டாய வசூல் :விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவிண்டாலுக்கு 100 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்வதாக குற்றம் சாட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு;

Update: 2021-03-08 07:15 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் பாபு என்ற முருகையன் தலைமையிலான விவசாயிகள் மனு அளித்தனர்.

அந்த மனுவில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆனங்கூர் கிராமத்தில் தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடாக கொள்முதல் செய்யும் நெல்லுக்கு கிலோவிற்கு ரூபாய் ஒரு ரூபாய் வீதமும் 40 கிலோ மூட்டைக்கு 40 ரூபாய் வீதமும் ஒரு குவிண்டாலுக்கு நூறு ரூபாய் வீதமும் அடாவடியாக மிரட்டி கட்டாய வசூல் செய்ததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கு பணிபுரியும் பிரபாகரன் கொள்முதல் செய்யும் அதிகாரியை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர். 

Tags:    

Similar News