வீடு தேடிச்சென்று வாரிசு சான்று வழங்கும் பணி: உதவி கலெக்டர் ஆய்வு

வீடு தேடிச்சென்று வாரிசு சான்று வழங்கும் பணியினை வேலூர் மாவட்ட உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்

Update: 2021-06-05 17:00 GMT

வீடு தேடிச்சென்று வாரிசு சான்று வழங்கும் பணியினை வேலூர் மாவட்ட உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக கொரோனா மற்றும் இதர பிரச்சினைகளால் இறந்த நபர்களுக்கு வீடு தேடிச் சென்று இறப்புச் சான்று மற்றும் வாரிசு சான்றுகளை  வழங்க வருவாய்த்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வீடுதேடிச் சென்று வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை வேலூர் சப்- கலெக்டர் கணேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அடுக்கம்பறை அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் கடந்த மே மாதம் 16-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடைய வீட்டுக்கு, உதவி கலெக்டர் உள்ளிட்டோர் நேரில் சென்று இறப்புச்சான்று மற்றும் வாரிசு சான்று வழங்கினார். வேலூர் தாசில்தார் ரமேஷ், பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளர் உலகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News