தீபாவளி பண்டிகையையொட்டி வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்

Update: 2021-10-30 02:54 GMT

வேலூர் பேருந்து நிலையம்

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வேலூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்படுகிறது. .

இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மண்டலத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 3-ந் தேதி வரை 3 நாட்களுக்கு பல்வேறு ஊர்களுக்கு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி வேலூரிலிருந்து பெங்களூருக்கு 10 பேருந்துகள், ஓசூருக்கு 20 பேருந்துகள், திருச்சிக்கு 10 பேருந்துகள், தர்மபுரிக்கு 5 பேருந்துகள், சென்னைக்கு 75 பேருந்துகள் இயக்கப்படும்.

பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அப்போது அதிக பயணிகள் வருகை தந்தால் அவர்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து ஆற்காடு, வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, திருப்பத்துர், தர்மபுரி மற்றும் ஓசூர் மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். தீபாவளிக்கு பின்னர் 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை கூடுதலாக திருப்பத்தூர், வேலூர், ஆற்காடு ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கு 20 பேருந்துகளும், ஓசூருக்கு 30 பேருந்துகளும், சென்னைக்கு 100 பேருந்துகளும் இயக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News