வேலூரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்; 21 பேர் கைது
வேலூரில் ஆந்திர, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 851 மதுபாட்டில்கள் பறிமுதல். 21 பேர் கைது செய்யப்பட்டனர்
வேலூர்மாவட்டத்தில் முழுஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி கள்ளச்சந்தையில் மது மற்றும் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணி மற்றும் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் மது, சாராயம் விற்ற 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வேலூருக்கு கடத்தி வரப்பட்ட 831 மதுபாட்டிகள் உள்பட 851 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 1,400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டன. 225 லிட்டர் சாராயம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்