வேலூரில் பைக்குகள் திருடிய வாலிபர் கைது.

வேலூரில் பைக்குகள் திருடிய வாலிபர் கைது. அவரிடமிருந்து திருடப்பட்ட 9 பைக்குகளை காவல்துறையினர் மீட்டனர்.;

Update: 2021-07-19 13:36 GMT

வேலூரில் பைக்குகள் திருடிய வாலிபர் கோபாலகிருஷ்ணன்

வேலூர் பாகாயம் போலீசார் நேற்று ஓட்டேரி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் . அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர் . அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் வேலூர் அடுத்த அத்தியூர் கலங்கமேடு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ( 19 ) என்பதும், இவர் வேலூர் வடக்கு, பாகாயம், அரியூர் பகுதிகளில் பைக்குகளை திருடியதும் தெரியவந்தது. திருடிய பைக்குகளை துத்திப்பட்டு முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது .

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News