வேலூர் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தது

வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்காக 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Update: 2021-07-22 12:16 GMT

கோவி ஷீல்டு கொரோனா தடுப்பூசி (மாதிரி படம் )

வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்தநிலையில் வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்காக 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தது.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் கூடுதலாக தடுப்பூசி வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News