ஆந்திரா மாநிலத்தில் இருந்து வேலூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து வேலூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்திய மூவரை போதை பொருள் நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர்
இன்று திருப்பதியிலிருந்து வேலூருக்கு வரும் ஆந்திர மாநில அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் , காட்பாடி தாலுகா கிருஷ்டியான்பேட் சோதனை சாவடியில் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு குற்ற புவனாய்வு துறையினர் , ஆந்திர மாநில அரசு பருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது திருப்பூரை சேர்ந்த கதிர்ராஜன், அவரது மனைவி புனிதா மற்றும் வீரணன், ஆகியோர் 34 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் அருகில் உள்ள இலமஞ்சிலியிலிருந்து கடத்தி வந்துள்ளது தெரியவந்தது.
இந்த நபர்கள் மீது வேலூர் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு குற்ற புலனாய்வு துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காட்பாடி நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.