காட்பாடி ரயில் நிலையம் மாற்றுத் திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
காட்பாடி ரயில் நிலையத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
காட்பாடி ரயில் நிலையத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காட்பாடி ரயில் நிலையத்தில் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏற்கனவே இருக்கும் ரயில் கட்டண சலுகைகளை பறிக்கக் கூடாது, ஏற்கனவே இருந்ததுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி ரயில் பெட்டிகளை இணைத்திட வேண்டும், பிளாட்பார டிக்கெட் ரூபாய் 50 என உயர்த்தியுள்ளதை குறைக்க வேண்டும், ரூபாய் 2 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக காட்பாடி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி நகரும் படிக்கட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் மீதான விரோத போக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்