வேலூரில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
வேலூரில் காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றிதிரிபவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வேலூர்,காட்பாடி,குடியாத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மக்கள் செல்லாதவாறு காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து கண்காணிக்கின்றனர். இருப்பினும் எந்த காரணமுமின்றி இருசக்கர வாகனங்களில் ஊரை சுற்றி திரிபவர்களை தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை செய்கின்றனர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் இது போன்று சுற்றிதிரிந்த 370 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது