குடியாத்தம் காமராஜர் மன்றம் மற்றும் நிதி நிறுவனத்தில் அடுத்தடுத்து பணம் கொள்ளை

குடியாத்தத்தில் காமராஜர் மன்றம் மற்றும் நிதி நிறுவனத்தில் அடுத்தடுத்து பணம் கொள்ளை: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

Update: 2021-07-22 12:26 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் , பிச்சனூர் பகுதிகளில் 1975ஆம் ஆண்டு காமராஜர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 46 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இங்கு  விசேஷ நாட்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். கடந்த 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  காமராஜர் மன்றத்தின் சேமிப்பு தொகையாக சுமார் 93 ஆயிரம் பணத்தை பீரோவில் வைத்துள்ளனர்.

நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் கதவின் பூட்டை உடைத்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 93 ஆயிரம் பணத்தையும் அன்னதானத்திற்கு வைத்திருந்த அரிசி மூட்டைகளை எடுத்து சென்றுள்ளார். பின்னர் திருடிய இடத்திலும் பூட்டின் மேலேயும் மிளகாய்த்தூள் தூவி சென்றுள்ளனர். மேலும் காமராஜ் மன்றத்தின் கட்டிடத்தின் அருகே உள்ள நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து 57 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காமராஜர் மன்ற பூட்டை உடைத்து கொள்ளை போன சம்பவம் மற்றும் அருகே நிதி நிறுவனத்தில்லூம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News