குடியாத்தம் அருகே ஏரியில் மணல் கடத்திய வாகனகள் பறிமுதல் இருவர் கைது

குடியாத்தம் அருகே ஏரியில் மண் மற்றும் மணல் கடத்திய மினி லாரி, டிராக்டர்கள் பறிமுதல். இருவரை கைது செய்து போலீசார் விசாரணை

Update: 2021-07-23 10:23 GMT

குடியாத்தம் அருகே ஏரியில் மண் மற்றும் மணல் கடத்திய  டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது'

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆறு மற்றும் ஏரிகளில் தொடர்ந்து மண் மற்றும் மணல் திருட்டு திருட்டுதனமாக அள்ளப்படுவதால் தொடர்ந்து நிலத்தடிநீர் பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உருவாகிறது

இந் நிலையில் குடியாத்தம் அடுத்த உள்ளி பட்டுவாம்பட்டி கிராமத்தில் உள்ள ஆற்று படுகையில் திருட்டு தனமாக மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலின் பேரில் தாலுக்கா காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தியபோது, மணல் கடத்தி வந்த மினி லாரி ஒன்றை பறிமுதல் செய்தனர்.

அதே போல் குடியாத்தம் அருகே உள்ள ஏரி பகுதிகளில் ஏரி மண் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்து ஜெகன் மற்றும் குணசேகர் இருவரையும் கைது செய்து குடியாத்தம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றன.

Tags:    

Similar News