குடியாத்தம் புதிய சப் - கலெக்டராக தனஞ்செழியன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

குடியாத்தம் புதிய சப் - கலெக்டராக தனஞ்செழியன் பொறுப்பேற்ற நிலையில், நிலுவையில் உள்ள சான்றிதழ்களை தாமதமின்றி உடனே வழங்க உத்தரவு

Update: 2021-07-16 15:22 GMT

குடியாத்தம் புதிய சப் - கலெக்டராக தனஞ்செழியன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சப் - கலெக்டராக இருந்த ஷேக்மன்சூர் ராமநாதபுரம் சப் - கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார் . தொடர்ந்து வேலூர் மாவட்ட நில எடுப்பு சப் - கலெக்டராக இருந்த தனஞ்செழியன் குடியாத்தம் சப் - கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் . அவருக்கு அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர், குடியாத்தம் கோட்டத்திற்கு உட்பட்ட தாலுகாக்களை சேர்ந்த பொது மக்கள் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள சாதி, வாரிசு, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை  உடனடியாக வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், குடியாத்தம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மக்கள், குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தற்காலிக வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News