திருவண்ணாமலை மாவட்டத்தில் இளையோர் தடகள போட்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இளையோர் தடகள போட்டி மாவட்ட தடகள தலைவர் அழைப்பு;

Update: 2021-11-30 07:41 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் இளையோர் தடகள போட்டி மாவட்ட தடகள போட்டிகள் நடைபெறவுள்ளது 

வயது வாரியாக நடைபெறும் போட்டிகள்

20 வயது, 100 மீட்டர், 200 மீட்டர் ,400 மீட்டர் ,1500 மீட்டர், 5000 மீட்டர் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தடகள ஓட்டம்

18 வயது 100 மீட்டர், 200 மீட்டர் ,400 மீட்டர் , 800 மீட்டர் நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் ,  தடகள ஓட்டம்              

16 வயது  100 மீட்டர், 200 மீட்டர் ,400 மீட்டர் நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் , வட்டு எறிதல்,   தடகள ஓட்டம்

14 வயது    60 மீட்டர் , 100 மீட்டர், 200  மீட்டர் நீளம் தாண்டுதல்,  , தடகள ஓட்டம்

10 வயது 50 மீட்டர்     400 மீட்டர்    நீளம் தாண்டுதல்  குண்டு எறிதல், வட்டு எறிதல்

பொது விதிமுறைகள்

போட்டிகளில் மூன்று வாய்ப்புகள் மட்டுமே அளிக்கப்படும்.  மாணவ, மாணவிகள் இரண்டு தனிநபர் போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

பத்தாம் வகுப்பு,  பன்னிரண்டாம் வகுப்பு அசல் சான்றிதழ் அல்லது நகராட்சி, மாநகராட்சியில் பிறந்ததற்கான அசல் சான்று.

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் 

tvmathletics@gmail.com

டிசம்பர் 3ஆம் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் காலை 8.30 மணியிலிருந்து போட்டிகள் நடைபெறும்.  இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் 35வது மாநில தடகளப் போட்டி திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்

போட்டிகளில் கலந்து கொள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் மற்றும் தேவையான இடைவெளியில் பின்பற்ற வேண்டும் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட தடகள தலைவர் மருத்துவர் எ கம்பன் தெரிவித்துள்ளார் 

Tags:    

Similar News