நகராட்சி பேரூராட்சிகளில் இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு
நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி பேரூராட்சிகளில் இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டது;
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் பணிகளிலும் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி ,பேரூராட்சிகளில் உள்ள தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .
நகராட்சி ,பேரூராட்சிகள் பொது பிரிவாக ஆண் பெண் இருபாலரும் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.