திருவண்ணாமலை மாவட்டத்தில் திருடப்பட்ட வாகனங்கள் நகைகள் மீட்கப்பட்டன
திருவண்ணாமலையில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்புடைய ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள், 66 சவரன் நகைகள் மீட்கப்பட்டன
திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள கார் இருசக்கர வாகனம் 66 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி உத்தரவின்பேரில் போளூர் டிஎஸ்பி மேற்பார்வையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்காணித்த போது போளூர், கலசப்பாக்கம், கடலாடி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் குற்றங்களில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில் அவர்கள் தென்மாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராமஜெயம், ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த ரமேஷ், மற்றும் நான்கு பேரை கைது செய்து விசாரணை செய்தனர். அவர்களிடமிருந்து திருடுபோன 66 சவரன் நகைகள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நான்கு கத்திகள், வீட்டை உடைக்க பயன்படும் இரும்புக் கம்பிகள் கைப்பற்றப்பட்டன. இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின்பு சிறையில் அடைக்கப்பட்டனர் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 25 லட்சம் ரூபாய் ஆகும்.