செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு;
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எழுவாம்பாடி கிராமத்தில் 650 க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. அதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அந்த கிராமத்தில் பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டடங்களுக்கு அருகில் தற்போது புதிதாக செல்போன் டவர் அமைக்கப்படவுள்ளது.
இந்திலையில் செல்போன் டவரின் கதிர் வீச்சினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் கிராமத்தில் பறவை இனங்கள் அதிகமாக வாழ்ந்து வருவதால் இதுபோன்ற செல்போன் டவர்கள் கதிர்வீச்சினால் பறவை இனங்கள் அழிவதை தடுக்கும் விதத்திலும் செல்போன் டவர் அமைக்க கூடாது என்று கூறி அந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.