மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேத்துப்பட்டில் மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-22 13:29 GMT

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போளுர் சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் தொழிலாளர் சங்க தாலுகா அமைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விவசாயிகள் தொழிலாளர்சங்க தாலுக்கா பொருளாளர் சேகர் விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மத்திய அரசின் 2020 மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.மேலும் விவசாயிகளின் விளைபொருட்களை விலை நிர்ணயம் செய்ய குழுக்கள் அமைக்க வேண்டும். மேலும் டெல்லியில் 381 நாட்கள் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதில் 715 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தனர்.

இவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியும் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தினர்.

அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் உதயகுமார் அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  சிபிஎம் சேத்துப்பட்டு வட்டார கமிட்டி பொறுப்பாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News