திருவண்ணாமலையில் டிச.11ல் தனியாா் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை டிச.11 மாபெரும் தனியாா் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.;
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (டிச.11) மாபெரும் தனியாா் துறை மற்றும் திறன் பயிற்சி ஆள் சோப்பு முகாம் நடைபெறுகிறது.
100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ஆம் வகுப்பு 10, 12-ஆம் வகுப்பு, தொழில்பயிற்சிக் கல்வி (ஐடிஐ), பட்டயப் பயிற்சி, கலை, அறிவியல் பட்டதாரிகள், ஆசிரியா் பயிற்சி முடித்தவா்கள், பொறியியல் பட்டதாரிகள், செவிலியா் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த இளைஞா்கள், பெண்கள் தங்களது ஆதாா் அடையாள அட்டை, சுயவிவரக் குறிப்பு, புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும். முகாமில் பங்குபெற விரும்புவோா் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பணி நியமனம் பெறுவோருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மாத ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது.
வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் இளைஞா்களுக்கு திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம், வேலூா் சாலை (தீபம் நகா்) ஆகிய இரு இடங்களில் இருந்து பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதிய உணவு வழங்கப்படும்