பிரதமர் கிசான் திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு வேண்டுகோள்

பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை துறை அதிகாரி வேண்டுகோள்;

Update: 2022-01-18 07:09 GMT

பிரதமர் கிசான் சம்மான் திட்டம் என்பது பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6000 வழங்கும் திட்டமாகும். இந்த உதவித் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தில் 3 லட்சம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். மத்திய அரசு பத்தாவது தவணையாக ரூபாய் 2000 கடந்த 3ஆம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அடுத்த தவணை வரும் ஏப்ரல், ஜூலை மாதத்தில் விடுவிக்கப்படும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் அருகே உள்ள கணினி சேவை மையங்கள்,  இ சேவை மையங்களுக்கு சென்று பிரதமர் கிசான் நிதி திட்டத்தில் விவசாயிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தங்களது விரல் ரேகை பதிவு செய்து , ஓடிபி அடிப்படையில் வரும் மார்ச் மாதத்திற்குள் புதுப்பித்து பதிவேற்றம் செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் தங்களது ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்ணில் திருத்தம் இருந்தால் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆதார் நகல் ,வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் சிட்டா நகல் கொடுத்து திருத்தம் செய்ய சென்னை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News