கொரோனோ பரவல் எதிரொலி: திருவண்ணாமலை மாவட்ட கோவில்களில் தரிசனம் ரத்து
கொரோனோ நோய்த்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது;
தமிழகத்தில் கொரோனோ நோய்த்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், படவேடு ரேணுகாம்பாள் கோவில் உள்பட அனைத்துக் கோவில்களிலும் 1.8.21 முதல் 3.8 .21 வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
மேலும் ஆகம விதிப்படி பூஜை புனஸ்காரங்கள் அர்ச்சகர்கள் மூலம் செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.