கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்

செய்யாறு தாலுகா வெங்கோடு கிராமத்தை சேர்ந்த மக்கள் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2022-08-23 11:27 GMT

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்.

செய்யாறு தாலுகா வெங்கோடு கிராம ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் வெங்கோடு கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட தனியார் நிலத்தில் கல்குவாரி அமைப்பதை தடை செய்ய வேண்டும். 

கல்குவாரியால் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு ஏற்படும். கல்குவாரியில் வெடி வைப்பதால் அருகில் உள்ள வீடுகள் விரிசல் ஏற்படும். கல்குவாரி வாகனங்களால் கிராம சாலை குண்டும், குழியுமாக ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News