பெண்ணிடம் கத்தி முனையில் செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

செய்யாறு அருகே பெண்ணிடம் கத்தி முனையில் செயின் பறித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-05-04 06:42 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த திருப்பனங்காடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயன்( வயது 32). இவர் கேட்டரிங் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுகுணா (30), குழந்தை காமேஸ்வரன் அழைத்துக் கொண்டு நேற்று மாமியார் வீடான பாப்பாந்தாங்கள் கிராமத்திற்குச் சென்றார். பின்னர் இரவு சுமார் 10 மணி அளவில் திருப்பனங்காடு செல்வதற்காக சுமங்கலி வழியாக குளம் அருகே வந்து கொண்டிருந்தார்.

இவர்களை பின் தொடர்ந்து வந்த 3 பேர் விஜயன் ஓட்டிச்சென்ற பைக்கை மடக்கி, பெண்ணிடம் கத்தியைகாட்டி மிரட்டி கழுத்தில் இருந்த 6 பவுன் தாலியை செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி செந்தில், இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

கடந்த 2 மாதங்களில் டாஸ்மாக் ஊழியரிடம் 3 லட்சமும், அதேபோன்று தாயும் மகளிடமிருந்து 11 ½ சவரன் நகை கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இதுபோன்று வழிப்பறி கொள்ளை சம்பவம் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News