செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு
செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் முழு நேர பட்டைய படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு வகுப்புகளில் சேர மாணவர்கள் இணைய வழி மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்தக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், மின்னியல் மற்றும் மின்ணுவியல், மின்ணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.இந்த பாடப்பிரிவுகளில் மாணவ மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர்.
பிளஸ் டூ வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு இன சுழற்சி முறையில் கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறும்.
இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். www.tndiplomaonline.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
பதிவு கட்டணமாக எஸ்.சி. எஸ்.டி. வகுப்பினரை தவிர்த்து பிற வகுப்பினர் ரூ. 150 செலுத்த வேண்டும் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 8 ஆம் தேதி ஆகும்.
செ்யயாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பான ஆய்வக வசதி, குறைவான கல்வி கட்டணம் ,இலவச பஸ்பாஸ், இலவச மடிக்கணினி, அரசு கல்வி உதவித் தொகை மற்றும் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு போன்ற பயன்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் செண்பகவல்லி தெரிவித்துள்ளார்.