ஆரணி, செய்யாறு மக்கள் குறைதீா் கூட்டத்தில் 130 மனுக்கள்

ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 130 மனுக்கள் வரப்பெற்றன.

Update: 2024-02-06 02:20 GMT

செய்யாற்றில் மனுக்களை பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர் பல்லவி வர்மா

திருவண்ணாமலை மாவட்ட ம் ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் நடைபெற்ற 130 மனுக்கள் வரப்பெற்றன.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் அலுவலக கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

இதில் பட்டா, பட்டா மாற்றம், இலவச மனைப் பட்டா, உள்பிரிவு செய்யக் கோருதல், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, தமிழ் நில திருத்தம், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை , கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா ரத்து, நில அளவை, குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், பரப்பு திருத்தம், ஆதரவற்ற விதவைச் சான்றிதழ், இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, கல்விக் கடன், வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 63 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் அலுவலக கண்காணிப்பாளா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

செய்யாற்றில் 67 மனுக்கள்:

செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகத்தில், சாா் -ஆட்சியா் பல்லவிவா்மா தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

இதில், செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனா்.

மனைப் பட்டா கோரி 6 பேரும், நிலப்பதிவேடு திருத்தம் கோரி ஒருவரும், ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி 8 பேரும், பட்டா மாற்றம் செய்யக் கோரி 15 பேரும், தமிழ் நிலம் திருத்தம் கோரி 8 பேரும், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கோரி ஒருவரும், நில அளவீடு செய்யக் கோரி 5 பேரும், இதர துறை மனுக்கள் 23 உள்பட மொத்தம் 67 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியா்கள் முகம்மது கனி, ஆனந்தகுமாா் மற்றும் மின் வாரியம், ஊரக வளா்ச்சித் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News