குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.

Update: 2021-12-23 06:44 GMT

திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் உத்தரவுப்படி  மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,

திருவண்ணாமலை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கிரன்சுருதி, அவர்களின் மேற்பார்வையில்,

 கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் ஐங்குணம் அரசினர் மேல்நிலை பள்ளியிலும்,

வெறையூர் காவல்துறையினர் சு. வாளவெட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும்,

போளூர் காவல் துறையினர் பெரியகரம் அரசினர் மேல்நிலை பள்ளியிலும்,

கலசபாக்கம் காவல்துறையினர் காரியந்தல் மேரி இமாகுலேட் மேல்நிலைபள்ளியிலும்,

வந்தவாசி காவல்துறையினர் இரும்பேடு அரசினர் மேல்நிலை பள்ளியிலும்,

செய்யாறு காவல்துறையினர் செய்யாறு அரசினர் கலை கல்லூரி,

செங்கம் காவல்துறையினர், செங்கம் சகாய மாதா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியிலும்,

ஆரணி காவல் துறையினர் எஸ்வி நகரம் அரசினர் உயர்நிலை பள்ளியிலும்

துணை காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News