குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.;
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,
மாவட்ட காவல் துறை சார்பாக மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை கிராமிய உட்கோட்டம், போளூர் , வந்தவாசி, செய்யார். செங்கம், ஆரணி ஆகிய இடங்களில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.