கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை
ஆரணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஆரணி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது
ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் யோகானந்தம் (வயது 33), இவரின் தம்பி சண்முகம். இருவரும் கடந்த 17.8.2016-ந்தேதி ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டீக்கடை எதிரே சென்றபோது, அந்த வழியாக வந்த பாண்டியன், ரஞ்சித் என்ற ரஞ்சித்குமார் ஆகியோர் சேர்ந்து, யோகானந்தத்தை கத்தியால் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
அதில் படுகாயம் அடைந்த யோகானந்தம் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதுகுறித்து ஆரணி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி ஜி.ஜெயவேல், யோகானந்தம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாண்டியன், ரஞ்சித் என்ற ரஞ்சித்குமார் ஆகியோருக்கு இந்திய தண்டனை சட்டம் 294 பிரிவின்படி 3 மாத சிறை தண்டனையும், 324 பிரிவின்படி ஒரு வருட சிறை தண்டனையும், 307 பிரிவின் படி தலா 5 வருட கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து பாண்டியன், ரஞ்சித்குமாரை ஆரணி டவுன் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.