வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு;
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் நபர்களுக்கு, மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி பதிவு தாரர்களுக்கு பதிவு செய்து ஒரு ஆண்டு முடிந்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 45 வயதுக்கு உட்பட்டவராகவும் பி சி மற்றும் எம்பிசி இதர வகுப்பினர் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் 72 ஆயிரத்துக்கும் இருக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.
உரிய தகுதியுள்ள நபர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அளிக்கலாம் அல்லது வேலைவாய்ப்பு துறை இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து அளிக்கலாம்.
அடுத்த மாதம் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்