15 நாட்களுக்கு பாடம் இல்லை, ஒரே ஜாலிதான்
மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால் பாடங்கள் நடத்தப்படாது;
இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் விக்டோரியா இந்து நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்
நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளை அளிக்க வேண்டும் எனவும், கதைப்பாடல், விளையாட்டு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன முதல் இரண்டாம் அதனால் அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி பள்ளி கல்லூரி மாணவர்கள் தான். பல மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு மாணவர்கள் வருகை தர உள்ளதால் பள்ளிகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதனை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் நேரில் கள ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.
மேலும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பள்ளிக்கு வருகை தர உள்ளதால் மனமகிழ்ச்சி வழிகாட்டுதலை பின்பற்றி குழந்தைகளின் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்த கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
நேற்று முதல் பருவ மழை தீவிரம் அடைந்து இருப்பதால் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மழைநீர் தேங்காமல் தவிர்க்கவும் பழுதடைந்த கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ள சுற்றுச் சுவர்கள் போன்றவை இருந்தால் உடனடியாக அதிகாரிகள் தெரிவித்து அவற்றை அப்புறப்படுத்த அதற்கான பணியில் தலைமையாசிரியர் பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை விக்டோரியா இந்து நடுநிலைப் பள்ளியில் இன்று வருகை தந்த மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் பிரகாஷ் பாபு வழிகாட்டுதலின்படி பள்ளியின் தலைமை ஆசிரியை பராசக்தி , மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து வகுப்பறையில் இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். மாணவர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனையும் செய்யப்பட்டது.
இன்றிலிருந்து 15 நாட்களுக்கு பாடம் எதுவும் நடத்தப்படாது என்று அறிவுறுத்தினார். மாணவர்கள் மிகவும் குஷி அடைந்துள்ளனர்.