தேர்தலன்று விடுமுறை வழங்காவிடில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தேர்தல் நாளன்று விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 19ஆம் தேதியன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்
சென்னை தொழிலாளர் ஆணையர் உத்தரவின் பேரில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்த பகுதியில் தேர்தல் நடைபெறும் நாளன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்கப்படாத நிறுவனங்கள் மீது சட்ட விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்க மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புகார் தெரிவிப்பதற்கான செல்போன் எண்கள்,
திருவண்ணாமலை 9710825341, 9442965035
போளூர் 9444857826
ஆரணி 9952308664
செய்யாறு 9787275584
ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என தெரிவித்துள்ளார்.