திருத்தணி சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பம் கட்டும் பணிகள் தீவிரம்

திருத்தணி முருகர் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா மலை அடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பம் கட்டும் பணிகள் தீவிரம்;

Update: 2021-07-29 14:45 GMT

சரவண பொய்கை

திருத்தணி முருகர் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா மலை அடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முருகனின் ஐந்தாம்படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டு தோறும் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா ஐந்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து பெரும் திரளாக பக்தர்கள் காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள், பக்க்தர்கள் வசதிக்காக அரசின் சார்பில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படும்.

இருப்பினும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தடுக்கும் வகையில் ஆடிக்கிருத்திகை விழா ரத்து செய்யப்பட்டது. இந் நிலையில் ஆடிக்கிருத்திகை விழா இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில்  அரசின் சார்பில் இதுவரை விழாவிற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இருப்பினும் மலைக்கோயில் வணண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும், சரவண பொய்கை திருக்குளத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழாவிற்காக தெப்பம் கட்டும்  பணியில்  இரண்டு நாட்களாக  50 க்கும் மேற்ப்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடிக்கிருத்திகை விழா வழக்கம் போல்  பக்தர்கள் காவடிகள் செலுத்தி  முருகப்பெருமானை தரிசிக்க அனுமதி வழங்கப்படுமா அல்லது  கட்டுப்பாடுகளுடன்  விழா நடைபெறுமா என்பது குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை அறிக்கை வெளியிடப்படாத நிலையில் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Tags:    

Similar News