செத்த கோழிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

செத்த கோழிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2021-10-06 14:00 GMT

கலெக்டர் வினீத்.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் 3 வது காலாண்டிற்கான மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் வீனித் பேசியதாவது: அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையினர் உரிமம் மற்றும் பதிவு சான்று பெற்று வணிகம் செய்ய வேண்டும். விற்பனை ரசீதில் நடைமுறையில் உள்ள உரிமம் மற்றுமு் பதிவு சான்றுடன் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். உணவு வணிக தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து மீதமாகும் சமையல் எண்ணெய் பயன்பாட்டிற்கு வரக்கூடாது என்ற நோக்கத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கு ஒரு லிட்டர் ரூ.25 வாங்கப்படும். செத்த கோழிகளை உணவங்கள் மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி லலிதாம்பிகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News