பல்லடம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.;
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் 58. இவரது மனைவி பானுமதி 55. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சக்திவேல் பனியன் தொழிலாளியாக பல்லடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.