பல்லடத்தில் சாலையோரம் மரக்கன்று நடவு
பல்லடத்தில், சாலையோரம் மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது.;
கோடங்கிபாளையம் பிரிவில் இருந்து- பருவாய் வரை புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கிறிஸ்துராஜபுரம் பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் இருபுறமும், மரக்கன்று நட தீர்மானிக்கப்பட்டு, ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமையில், மரக்கன்றுகள் நடப்பட்டன.
'மகிழ்வனம்' அமைப்பின் செயலாளர் பாலசுப்ரமணியம், 'இப்கோ' நிறுவனங்களின் இயக்குனர் ராமச்சந்திரன், 'வனம்' அமைப்பின் அறங்காவலர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியிருப்பு வளாகங்களிலும், ரோட்டின் இருபுறமும் பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், 'தாய்மண்' பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், சந்திரசேகர், கருணாநிதி உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.