அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல், ரூ.3 கோடி கொடுத்து மீட்பு, திக், திக்

காங்கேயம் அருகே மர்ம கும்பலால் கடத்தப்பட்ட மகனை, அரிசி ஆலை அதிபர் 3 கோடி கொடுத்து மீட்ட திக், திக் சம்பவம் வெளியாகியுள்ளது.;

Update: 2021-08-23 11:28 GMT
பைல் படம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, அரிசி ஆலை அதிபர். இவரின் மகன் சிவபிரதீப்(25),  மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்றது..

அரிசி ஆலை அருகே சிவபிரதீப்பை கடத்திய கும்பல் ரூ.3 கோடி தருமாறு பெற்றோருக்கு மிரட்டல் விடுத்தனர். இதனால் செய்வதறியாத ஈஸ்வரமூர்த்தி, ரூ.3 கோடி கொடுத்து மகனை மீட்டார்.

இந்நிலை போலீசில் தொழிலதிபர் ஈஸ்வரமூர்த்தி புகார் ,செய்தார்.கடத்தலில் ஈடுபட்டவர்களை டி.எஸ்.பி குமரேசன் தலைமையிலான 8 தனிப்படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News