மழையால் காங்கேயம் பகுதியில் தேங்காய் உடைக்கும் பணி பாதிப்பு

காங்கேயம் பகுதியில் சாரல் மழையால் தேங்காய் உடைக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2021-07-19 09:29 GMT

காங்கேயம் பகுதியில் சாரல் மழையால் மூடி வைக்கப்பட்டுள்ள கொப்பரைக்களம்.

காங்கேயம் சுற்று வட்டாரத்தில் 100 க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய், தமிழகம்,கேரளாவுக்கு அதிகளவில் செல்கிறது. தற்போது தேங்காய் அறுவடை சீஸன் துவங்கி உள்ளதால், வரத்து அதிகரித்து உள்ளது.

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு, 30 ஆயிரம் தேங்காய் வரையும், கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு, 28 ஆயிரம் தேங்காய் வரையும் வரத்தாகிறது. தேங்காய் அதிகபட்சமாக 27.59 ரூபாய்க்கும், குறைந்தபட்சம் 21.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இருந்து காங்கேயம் தேங்காய் உற்பத்தியாளர்கள், தேங்காய் வாங்கி, உடைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடனும், சாரல் மழை பெய்து வருவதால், காங்கேயம் சுற்று வட்டாரத்தில் தேங்காய் உடைப்பு பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேங்காய் உடைத்து கொப்பரை காய வைக்கும் களங்கள், தார் பாய் மூலம் மூடி வைக்கப்பட்டு உள்ளன. மழை ஓய்ந்து, வெயில் அடிக்கத் தொடங்கும் போதே பணிகள் மீண்டும் தொடங்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News