வெள்ளகோவில் பகுதியில் நாளை மின் தடை
வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவிப்பு.;
காங்கயம் மின் கோட்டத்துக்கு உட்டபட்ட வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி வெள்ளகோவில் நடேசன் நகர், கொங்கு நகர், டிஆர் நகர், பாப்பன்பாளையம், குமாரவலசு, காமராஜபுரம், தாசவநாய்க்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காலிபாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, சேர்வகாரன்பாளையம், அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மாந்தபுரம், மங்கலபட்டி, என்.ஜி.வலசு, வரகாளிபாளையம், மேட்டுபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்து உள்ளது.