காங்கேயம் பகுதியில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் ஓட்டல், கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;

Update: 2021-09-24 13:20 GMT

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரப்பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்களில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், நகரில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பாலிதீன் கவர்கள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும். பேக்கரிகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் மற்றும் டீ தூள் போன்றவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதிகாரிகளின் ஆய்வில், 3 கடைகளில் பாலிதீன் கவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கடையின் உரிமையாளருக்கு தலா 2000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வில் பாதுகாப்பு அதிகாரி கோடீஸ்வரன், பொங்கலூர் உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயராஜா உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags:    

Similar News