காங்கயம் ஒழுங்கு முறை கூடம்: தேங்காய் பருப்பு ரூ.4லட்சத்திற்கு ஏலம்

காங்கயம் ஒழுங்கு முறை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் பருப்பு ரூ.4 லட்சத்திற்கு ஏலம் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update: 2021-09-20 14:01 GMT

ஏலத்திற்கு வந்திருந்த தேங்காய் பருப்புகள்.

காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ஏலத்திற்கு 3 ஆயிரத்து 399 கிலோ தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக கிலோ ரூ.102.20 க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.82.90 க்கும், சராசரியாக கிலோ ரூ.101.80 க்கும் என மொத்தம் 4 லட்சத்து 3 ஆயிரத்து334 ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News