காங்கேயம் அருகே படியூரில் மில்லில் தீ விபத்து: பொருட்கள் சாம்பல்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே படியூரில் உள்ள மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2021-07-31 07:09 GMT

காங்கேயம் அருகே படியூரில் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூர் அமைந்துள்ளது. படியூர் பஸ் ஸ்டாப் எதிரே கணபதிபாளையம் செல்லும் ரோட்டில் ரஷீத்அலி,62, வாடகை இடத்தில் ரோவல் ஸ்பின்னிங் மில் நடத்தி வருகிறார்.

இந்த மில்லில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி எரிய துவங்கியது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர், தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும், காங்கேயம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காங்கேயம் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து, காங்கேயம் போலீஸார் விசாரிக்கின்றனர். தீ விபத்தில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Tags:    

Similar News