காங்கயம்: இடி தாக்கியதில் 35 ஆடுகள் பலி
காங்கயம் அருகே இடி தாக்கியதில் 35 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஓலப்பாளையம் கொழிஞ்சிக்காட்டு வலசை சேர்ந்தவர் சிவாகணேசமூர்த்தி.56, விவசாயி. இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக காங்கயம் பகுதியில் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை நேரத்தில் பெய்த மழையின் போது பயங்கர இடி ஒன்று, சிவாகணேசமூர்த்தியின் தென்னந்தோப்பில் விழுந்தது. அப்போது, அங்கு கட்டப்பட்டு இருந்த 35 ஆடுகள் இடிதாக்கி பலியாகியது. தகவல் அறிந்த கால்நடை டாக்டர் , சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், காங்கயம் தாசில்தார் நேரில் வந்து இறந்த ஆடுகளின் மொத்த மதிப்பு 3 லட்சம் ரூபாயாகும். அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்து உள்ளார்.