காங்கயத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

காங்கயத்தில் நடைபெற்ற இலவச சிறப்பு மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.;

Update: 2021-10-27 11:45 GMT

காங்கயத்தில் நடந்த முகாமில் மருந்து பெட்டகத்தை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் காங்கயத்தில் நடந்தது. முகாமை, அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். முகாமில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், வீடு தேடி வரும் திட்டப் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவன்மலையில் காங்கயம் காளை சிலைகளுடன் அமைக்கப்பட்ட நுழைவுவாயில் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, காங்கயம் தாசில்தார் சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News